4 percent reservation for disabled people announced by edappadi

தமிழகத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவீதம் இட ஒதுக்கீடு அறிவித்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

தமிழகத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு கடந்த ஆண்டுகள் வரை 3 சதவீதம் இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் ஒரு சதவீதம் உயர்த்தி, தற்போது 4 சதவீதமாக அரசு உயர்த்தியுள்ளது.

இதன்மூலம் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு ஒரு சதவீதம், செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு ஒரு சதவீதம், கை மற்றும் கால் சம்பந்தமான குறைபாடு உள்ளவர்களுக்கு ஒரு சதவீதம், மனநலம் குன்றியோருக்கு ஒரு சதவீதம் என குறிபிட்டுள்ளார்.

இதன் மூலம் அரசு பணி, பள்ளி மற்றும் கல்லூரி ஆகியவற்றில் மாற்றுத் திறனாளிகளுக்கு வாய்ப்புகள் அளிக்கப்படும் என தெரிகிறது.

அதேபோல் அரசு சார்ந்த நிறுவனங்கள், அரசு வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு மற்றும் வயது மூப்பு அடிப்படையில் பணிக்கான ஆணை வழங்கப்படும் என கூறப்படுகிறது.

கடந்த 1989ம் ஆண்‘டில் இருந்து 3 சதவீதம் ஒதுக்கீட்டை மாற்றுத் திறனாளிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த அறிவிப்பு முறையாக வழங்கப்படவில்லை என ஏற்கனவே பல்வேறு அமைப்புகள் சார்பில் மாற்றுத் திறனாளிகள் போராட்டம் நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அறிவிப்பு முழுமையாக மாற்றுத் திறனாளிகளுக்கு போய் சேரவேண்டும். அறிவிப்பு வெறும் கண் துடைப்பாக இருக்க கூடாது என மாற்றுத் திறனாளிகள் சார்பில் கோரிக்கை எழுந்துள்ளது.