திருச்சி அருகே செருப்புகடை உரிமையாளர் ஒருவர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் பெண் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 
திருச்சி அருகே திருவானைக்காவல் சிங்கபெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர்கள்  விஸ்வநாதன் - தெய்வானை. விஸ்வநாதன் அதே பகுதியில் செருப்புகடை நடத்தி வந்தார். இந்த தம்பதியனருக்கு குணசேகரன் என்ற மகனும் நிஷாந்தினி என்ற மகளும் இருந்தனர். 
இந்நிலையில், விஸ்வநாதன் குளிர்பானத்தில் விஷத்தை கலந்து மனைவி, மகன், மகள் ஆகியோருக்கு கொடுத்துவிட்டு தானும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கபட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வந்தனர். 
இந்நிலையில் இந்த வழக்கு சம்பந்தமாக சங்கீதா என்ற பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.