குஜராத்தில் கைது செய்யப்பட்ட 4 ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் தமிழர்களா.? யாரை கொலை செய்ய திட்டம்.? வெளியான ஷாக் தகவல்
நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், குஜராத்தில் 4 ஐஎஸ்ஐஎஸ் பயரங்கரவாதிகள் கைது செய்யப்பட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த 4 பேரும் இலங்கை தமிழர்கள் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐஎஸ் ஐஎஸ் பயரங்கரவாதிகள் கைது
இந்தியாவின் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் 5 கட்டங்கள் முடிவடைந்துள்ளது. 6 மற்றும் 7வது கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. வருகிற ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான நிலையத்தில் நேற்று 4 ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கி மற்றும் தோட்டாக்களில் பாகிஸ்தான் நாட்டின் பழங்குடியின முத்திரை இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 4 ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளிடம் நடைபெற்ற விசாரணையில் இலங்கையில் இருந்து சென்னை வழியாக அகமதாபாத் வந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
பயங்கரவாதிகள் திட்டம் என்ன.?
கடந்த 18-ந் தேதி குஜராத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் மிகப்பெரிய தாக்குதலுக்கு திட்டமிட்டிருப்பதாக பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்து இருந்தது. இதன் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனை காரணமாகவே இலங்கையில் இருந்து சென்னை வழியாக ஐ.எஸ். பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்,
மேலும் இலங்கை தமிழர்கள் என்பதால் இவர்களுக்கு தமிழ் மொழி மட்டுமே தெரிந்துள்ளது. இதனையடுத்து தமிழ் தெரிந்த அதிகாரிகள் மூலம் நடத்தப்பட்ட விசாரிணையில், பயங்கரவாதிகள் 4 பேரும் குஜராத்தில் மிகப்பெரிய தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டியதும், இந்து அமைப்பின் தலைவர்களை குறிவைத்துள்ளதாகவும் விசாரணையில் தகவல் வெளியானதாக கூறப்படுகிறது. மேலும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பினர் தலைவர்களோடு இந்த பேருக்கும் தொடர்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.