35 போலீஸ் டிஎஸ்பிக்களை இடமாற்றம் செய்து தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் பணியாற்றி வந்த காவல் உதவி ஆணையர்களும் இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த டிஎஸ்பிக்களுக்கும் பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
35 டிஎஸ்பிக்கள் இடமாற்றம்
குற்ற சம்பவங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தமிழக காவல்துறை மேற்கொண்டு வருகிறது. மேலும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகிறது. இந்த நிலையில், குற்ற சம்பவங்களை தடுக்க தவறியவர்களை இடமாற்றம் செய்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரே நேரத்தில் 35 போலீஸ் டிஎஸ்பிக்களை இடமாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,
அடையாறு காவல் உதவி ஆணையராக இருந்த நெல்சன் தாம்பரம் உதவி ஆணையராக மாற்றம். காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருள் செல்வன் தாம்பரம் போக்குவரத்து காவல்துறை புலனாய்வு பிரிவு உதவி ஆணையராக மாற்றம். திருவள்ளு மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமை ஆணையத்தின் டிஎஸ்பியாக இருந்த இளங்கோவன் சென்னை திருவொற்றியூர் காவல் உதவி ஆணையராக மாற்றம்.

உதவி ஆணையர்களும் இடமாற்றம்
ஆவடி பட்டாபிராம் காவல் உதவி ஆணையராக இருந்த சதாசிவம் வண்ணாரப்பேட்டை காவல் உதவி ஆணையராக மாற்றம். தாம்பரம் சேலையூர் காலல் உதவி ஆணையராக இருந்த முருகேசன் சென்னை அடையாறு காவல் உதவி ஆணையராக மாற்றம். தாம்பரம் காவல் உதவி ஆணையராக இருந்த சீனிவாசன் சென்னை சைதாப்பேட்டை காவல் உதவி ஆணையராக மாற்றம். சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையராக இருந்த மோகன் கடலூர் திட்டக்குடி டிஎஸ்பியாக மாற்றம். சென்னை சைதாப்பேட்டை காவல் உதவி ஆணையராக இருந்த கிறிஸ்டின் ஜெயசீலி தாம்பரம் சேலையூர் காவல் உதவி ஆணையராக மாற்றம்.

காத்திருப்போர் பட்டியலில் டிஎஸ்பிக்கள்
காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஜி.கே.கண்ணன் தமிழக காவல்துறை தொலைத்தொடர்பு பிரிவு டிஎஸ்பியாக மாற்றம், காத்திருப்போர் பட்டியலில் இருந்த சுபகுமார் மதுரை நகர திடீர் நகர் காவல் உதவி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பியாக இருந்த மனோகரன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம். திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பியாக இருந்த தனுசியா தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பியாக மாற்றம்.
காத்திருப்போர் பட்டியலில் இருந்த செல்வசேகர் தாம்பரம் காவல் ஆணையரக பயிற்சி பிரிவு மையத்தின் உதவி ஆணையராக மாற்றம். சென்னை காவல்துறை (கிழக்கு) மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு உதவி ஆணையராக இருந்த மகீமைவீரன் ஆவடி காவல் ஆணையரக மணலி காவல் உதவி ஆணையராக மாற்றம் உள்ளிட்ட 35 டிஎஸ்பிக்கள் இடமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்
