சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில், பீகாரி பயணியிடம் இருந்து செல்போன், மற்றும் பணம் பறித்ததாக தமிழ்நாடு சிறப்பு காவலர்கள் ராமலிங்கம், அருள்தாஸ், இருதயராஜ் ஆகியோரை கைது செய்ய ஐஜி பொன்மாணிக்கவேல் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு செல்ல அதிக அளவில் பயணிகள் குவிவது வழக்கம். இதனால், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும்.

இதனால்,  ரயில் நிலைய வளாகம் மற்றும் வெளிப்புறத்தில் தமிழக சிறப்புப்படை காவலர்கள் பணியில் இருப்பார்கள்.

இந்த நிலையில், பீகாரைச் சேர்ந்த பயணி ஒதுவரை தாக்கி, அவரிடமிருந்து செல்போன் மற்றும் பணத்தை தமிழ்நாடு சிறப்புப்படை காவலர்கள் பறித்ததாக, பாதிக்கப்பட்ட பயணி, ரயில்வே நிலைய ஐ.ஜி. பொன்மாணிக்கவேலிடம் புகாரளித்துள்ளார்.

பயணியின் புகாரை அடுத்து, விசாரணை நடத்திய ஐஜி பொன்மாணிக்கவேல், தமிழ்நாடு சிறப்புப்படை காவலர்கள் ராமலிங்கம், அருள்தாஸ், இருதயராஜ் ஆகிய மூவரையும் கைது செய்ய உத்தரவிட்டார்.

கைது செய்யப்பட்ட சிறப்புப்படை காவலர்கள், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக கலக்கிய பொன்மானிக்கவேல், தற்போது ரயில்வே பிரிவுலும் தனது அதிரடியை தொடர்ந்துள்ளதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.