கடுமையான சட்டங்களை கொண்ட சிங்கப்பூர் நாட்டில் 14 வயதை அடையாத பெண்களுடன் உடலுறவு வைத்துக் கொள்வது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது. இந்த குற்றத்துக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதம் மற்றும் பிரம்படி கொடுக்கவும் சட்டத்தில் இடமுண்டு.

இந்நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் இங்குள்ள லிட்டில் இந்தியா பகுதியில் தனது நண்பர்களுடன் சுற்றிகொண்டிருந்த 13 வயது சிறுமியை சந்தித்த 3 இந்தியர்கள் அவரது விருப்பத்துடன் உடலுறவில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து, சிறுமியின் தாயார் போலீசில் புகார் அளித்ததன் அடிப்படையில், 14 வயதை அடையாத பெண்களுடன் உடலுறவு வைத்துக் கொண்ட குற்றச்சாட்டின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அப்போது தீர்ப்பளிகையில் இந்தியாவை சேர்ந்த மூன்று பேருக்கு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்

“திருடனை அடித்தே கொன்ற ஊர் மக்கள்”

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு, மறைமலைநகர், காட்டாங்கொளத்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் அடிக்கடி வீடு உடைத்து கொள்ளை மற்றும் நடந்து செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பு, வாகனங்களில் தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து நகை பறிப்பது சமீபகாலமாக அதிகரித்தது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஏராளமானோர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்து வரும் நிலையில், செங்கல்பட்டு அடுத்த காந்தலூர் கிராமத்தை சேர்ந்த பாபு என்பவர் கடந்த 20ம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டார். நேற்று முன்தினம் அதிகாலை ஒரு மணியளவில் பாபு வீட்டின் கதவு உடைக்கும் சத்தம் கேட்டு, பக்கத்து வீட்டுக்காரர்கள் எழுந்து பாபு வீட்டை நோக்கி வந்தனர். அப்போது பாபுவின் வீட்டை மர்ம நபர்கள் 2 பேர் உடைத்துகொண்டிருப்பதை பார்த்து ‘திருடன்..

திருடன்..’ என்று சத்தம் போட்டனர். அவர்களது கூச்சல் கேட்டு அப்பகுதி மக்கள் கூடினர். இதனால் திருடர்கள் அங்கிருந்து தப்பியோட முயன்றனர். அதற்குள் பொதுமக்கள் அவர்களை விரட்டிச்சென்று சுற்றிவளைத்தனர். இதில் ஒருவர் தப்பிவிட மற்றொருவர் அவர்களிடம் சிக்கி கொண்டார். அவரை பொதுமக்கள் சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர், ஆத்திரம் தீராமல் அந்த நபரை அங்குள்ள ஒரு கம்பத்தில் கட்டி வைத்தும் தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த அந்த நபர் மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் அந்த நபரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

இதுகுறித்து, கிராம மக்களே செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் சக்திவேல், எஸ்ஐ சங்கர் ஆகியோர் போலீசாருடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதில், கிராம மக்கள் அடித்து உதைத்ததில் அவர் இறந்ததாக தெரிகிறது.

“சிறுமிகளிடம் சில்மிஷம் செய்த முதியவருக்கு 10 ஆண்டு சிறை”

சென்னையை சேர்ந்தவர் மீரான். இவர், ராயப்பேட்டையில் உள்ள இனிப்பு கடையில் வேலை செய்கிறார். இவருக்கு 10 வயதில் ஒரு மகளும், 6 வயதில் மற்றொரு மகளும் உள்ளனர். இருவரும் தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 17.1.2015ம் ஆண்டு காணும் பொங்கல் அன்று மீரானின் குழந்தைகள் இருவரும் வீட்டின் அருகே உள்ள கடைக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு தரமணி, மகாத்மா காந்தி நகர், பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த முகமது பாபு (68), என்பவர் குழந்தைகள் இருவரையும் அழைத்து அவர்களிடம் தவறாக நடந்துள்ளார். உடனே, குழந்தைகள் அழுதுள்ளனர்.

இதை சற்றும் பொருட்படுத்தாத முதியவர் குழந்தைகளிடம் மிகவும் கீழ்த்தரமாக நடக்க முயன்றுள்ளார். இதுகுறித்து மீரான் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் முதியவரை கைது செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் முதியவர் முகமது பாபு மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.  

காதலியை உல்லாசம் அனுபவித்து கழட்டிவிட்ட வாலிபன்

சைதாப்பேட்டையை சேர்ந்தவர் கமலா.  இவர் தனியார் கால் சென்டரில் வேலை செய்து வருகிறார். எம்.கே.பி நகரைச் சேர்ந்த புருஷோத்தமன் என்பவரை கமலா கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளனர். புருஷோத்தமன் திருமணம் செய்து கொள்வதாக கூறி கமலாவிடம் பலமுறை உல்லாசமாக இருந்து உள்ளார். ஆனால், தற்போது திருமணம் செய்ய மறுத்துள்ளார்.  இதுகுறித்து கமலா சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து புருஷோத்தமனை நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.