Asianet News TamilAsianet News Tamil

மீனவர்களை கைது செய்த இலங்கை-மத்திய அரசின் அதிரடி நடவடிக்கையால் இரவோடு இரவாக விடுவிக்கப்பட்ட 22 தமிழக மீனவர்கள்

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மீனவர்களை விடுக்க மத்திய அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக இரவோடு இரவாக மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.  

22 Tamil Nadu fishermen arrested by Sri Lanka Navy released KAK
Author
First Published Nov 19, 2023, 8:16 AM IST | Last Updated Nov 19, 2023, 8:16 AM IST

தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை

கச்சத்தீவை ஒட்டிய இந்திய பாரம்பரிய மீன்பிடிப்புப் பகுதிகளில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை அடிக்கடி கைது செய்யப்படுகிறது. இதனை தடுத்து வேண்டும் என தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை சிறைப்பிடிப்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 64 பேர் கடந்த மாதத்தில் இரு கட்டங்களாக கைது செய்யப்பட்டனர். முதலில் கைது செய்யப்பட்ட 27 பேரில்  26 பேர் இரு கட்டங்களாக விடுதலை செய்யப்பட்ட நிலையில், ஒரு மீனவர் இரண்டாவது முறையாக கைது செய்யப்பட்டவர் என்று கூறி  அவருக்கு மட்டும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. 

22 Tamil Nadu fishermen arrested by Sri Lanka Navy released KAK

மீனவர்களை விடுவிக்க கோரிக்கை

இதனால் இராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சம் ஏற்பட்டுள்ளநிலையில், நேற்று  22 ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர். இந்தநிலையில் நேற்று ராமேஸ்வரம் சென்ற மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை மீனவர்களின் குடும்பத்தினர் சந்தித்தனர். அப்போது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

22 Tamil Nadu fishermen arrested by Sri Lanka Navy released KAK

இரவோடு இரவாக மீனவர்கள் விடுவிப்பு

இதனையடுத்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை தொடர்பு கொண்டார். மேலும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தையும் தொடர்பு கொண்டு தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதனையடுத்து இலங்கையில் கைது செய்யப்ப்ட்ட தமிழக மீனவர்கள் 22 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இல்ங்கையில் இருந்து 2 நாட்டுப்படகுகள் மூலம் ராமேஸ்வரத்திற்கு திரும்பி வந்துகொண்டுள்ளனர். 

இதையும் படியுங்கள்

ராமேஸ்வரத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள புதிய பாம்பன் பாலம்! விரைவில் திறப்பு விழா!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios