2024ல் புதிய இந்தியா! நம்பிக்கை தரும் பெங்களூரு கூட்டம்! சென்னை திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
பெங்களூருவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்திற்குப் பின் சென்னை திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின் 2024ஆம் ஆண்டில் புதிய இந்தியா உருவாகும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்திற்குப் பின் சென்னை திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின் 2024ஆம் ஆண்டில் புதிய இந்தியா உருவாகும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இரண்டு நாட்கள் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டம் வெற்றிகரமாக நடந்ததாகவும் இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் நம்பிக்கை தரும் வகையில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, எதிர்க்கட்சிகள் கூட்டம் பற்றி பேசிய அவர், "நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற ஒன்றிணைந்துள்ளோம். தமிழ்நாட்டைப் போல் இந்திய அளவில் கூட்டணி அமைத்து வெற்றி பெற வியூகங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டணி மூலம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அகில இந்திய அளவில் கொள்கை கூட்டணியாகவும், மாநில அளவில் தேர்தல் கூட்டணியாகவும் செயல்படுவோம்." எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
ராய்ப்பூர் சாலையில் இளைஞர்கள் நிர்வாணப் போராட்டம்! சமூக வலைத்தளங்களில் வெளியான ஷாக்கிங் வீடியோ!
அமைச்சர் பொன்முடி மற்றும் அவர் மகனும் எம்.பி.யுமான கௌதம் சிகாமணி தொடர்புடைய அமலாக்கத்துறை சோதனை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், தங்களுடன் கூட்டணியில் உள்ளவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதுதான் அவர்களின் நிலைப்பாடு என்றார். மேலும், எதுவாக இருந்தாலும் சட்டப்படி சந்திப்போம் எனவும் உறுதிபட தெரிவித்தார்.
டெல்லி நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டம் பற்றி கருத்து தெரிவித்த மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியால் குற்றம்சாட்டப்பட்டவர்கள் இப்போது அவரது அருகிலேயே அமர்ந்திருக்கிறார்கள் என்று சாடினார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரில் நேற்றும் இன்றும் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடந்தது. முதலில் பாட்னாவில் நடந்த கூட்டத்தில் 16 கட்சிகள் கலந்துகொண்ட நிலையில், இந்தக் கூட்டத்தில் 26 கட்சிகள் கலந்துகொண்டன. இதில் மு.க.ஸ்டாலினுடன் வைகோ, திருமாவளவன், ஜவாஹிருல்லா உள்ளிட்ட பிற கூட்டணிக் கட்சிகளும் கலந்துகொண்டன.
எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு I - N - D - I - A (இந்திய தேசிய ஜனநாயக உள்ளடக்கிய கூட்டணி) என்று ஒருமனதாகப் பெயரிடப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் மும்பையில் நடைபெறும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அந்தக் கூட்டத்தில் 11 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கபடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவில் மகளின் எடைக்கு எடை 51 கிலோ தக்காளியை துலாபாரமாக வழங்கிய தம்பதி!