2018 celebrations various restrictions apply

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு நட்சத்திர விடுதி, கேளிக்கைகளுக்கு போலீஸ் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெரிவித்திருப்பதாவது: #பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு விண்ணப்பித்து சிறப்பு உரிமம் பெற கட்டாயம் பெறவேண்டும்.

நள்ளிரவு 1 மணியுடன் மது பான விருந்து அளிப்பதை கொள்ள வேண்டும். அளவுக்கு மீறி குடிபோதையில் ஈடுபடுவர்களைவிடுதி நிர்வாகம் பத்திரமாக அனுப்பி வைக்க வேண்டும். அப்படி முடியவில்லைஎன்றால்,அவர்கள் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்க வேண்டும்.

#விடுதிக்கு வரும் வாகனங்கள் கேளிக்கை நிகழ்ச்சிகள் CCTV கேமரா மூலம் பதிவு செய்யவேண்டும்.

#விடுதி நீச்சல் குளங்களை டிச31-ம் தேதி மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரையில் மூடப்பட வேண்டும்.

# நீச்சல் குளத்தில் உள்ள தண்ணீரை முழுமையாக வெளியேற்றிவிட்டு, நீச்சல் குளத்தை மூடி வைக்க வேண்டும். அதேபோல,நீச்சல் குளத்தின் மீதோ, அனுமதிபெறாத இடங்களின் மீதோ மேடை அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

#மது அருந்தியவர்களை அந்தந்த விடுதிகளே அவர்களின் வீடுகளில் கொண்டு போய் சேர்க்க வேண்டும்.

#விடுதிக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படி விதித்துள்ள மேலே உள்ள கட்டுப்பாடுகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் விடுதி நிர்வாகிகளுக்கு காவல்துறை கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டது.