காந்தி படம் இல்லாத 2000 ரூபாய் நோட்டுகள் விரைவில் புழக்கத்துக்கு வரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
500 ரூ., மற்றும் 1000ரூபாய் போன்ற அதிக மதிப்பிலான கரன்சி நோட்டுக்களால் கள்ளநோட்டுகள் மற்றும் கருப்புப் பணம் அதிகரிப்பதால் அவற்றை வாபஸ் பெற வேண்டும் என்று பல்வேறு தரப்புகளில் இருந்து மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

அதுமட்டுமின்றி, இந்திய நாணய புழக்க சந்தையில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளின் தேவை அதிகரித்துள்ளதாலும், நாட்டின் கருப்புப் பணத்தைக் குறைக்கவும் மத்திய அரசு 2,000 ரூபாய் நோட்டைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் உத்தரவுப்படிரூ.2,000 நோட்டுக்கள் மைசூரு கரன்சி அச்சகத்தில் அச்சிட்டு தயாராக இருப்பதாகவும், விரைவில் வெளியிடப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், காந்தி படம் இல்லாத 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டு வருவதாகவும், இந்த நோட்டுக்களை விரைவில் புழக்கத்துக்கு வரும் என கூறப்படுகிறது.

ஏற்கனவே அரசு கவனமாக இருந்தும் 1௦௦௦ மற்றும் 5௦௦ ரூபாய் நோட்டுக்களில் கள்ள நோட்டுக்கள் கலந்து புழக்கத்தில் உள்ள நிலையில், காந்தி படம் இல்லாத 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வந்தால் என்னாகுமோ என சாமானிய மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
