Kallakurichi : கள்ளக்குறிச்சி ஷாக் தகவல்.! மேலும் 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கல் ? வெளியான பகீர் வாக்குமூலம்
கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தில் 65 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கள்ளச்சாரயத்தில் கலப்பதற்காக பதுக்கி வைத்திருந்த மேலும் 2000 லிட்டர் மெத்தனாலை சிபிசிஐடி போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
கள்ளச்சாராய மரணம்
கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் அருந்தி 65 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கள்ளச்சாராய சம்பவத்தால் திமுக அரசுக்கு தொடர் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கள்ளச்சாராய மரணம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டார். மாவட்ட எஸ் பி முதல் அப்பகுதி காவல்துறையினர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள சிபிசிஐடி போலீசாருக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. கள்ளச்சாராய விற்பனை மற்றும் மெத்தனால் கலந்து விற்பனை செய்தது தொடர்பாக இதுவரை 20க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
2000லிட்டர் மெத்தனால்
முக்கிய குற்றவாளியான மாதேஷ் என்பவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில் கள்ளச்சாராயத்தில் கலக்கப்பட்ட மெத்தனால் எங்கிருந்து வாங்கப்பட்டது. அந்த மெத்தனால் எங்கு பதுக்கி வைக்கப்பட்டது என்பது தொடர்பாக வாக்குமூலம் வெளியாகியுள்ளது. அதில், பண்ருட்டி அருகே 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது.
வீரப்பெருமாநல்லூர் பகுதியில் உள்ள இயங்காத பெட்ரோல் பங்கில் 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கியதாக மாதேஷ் தெரிவித்துள்ளார். பெட்ரோல் பங்க் கீழே 2000 லிட்டர் மெத்தனால் புதைத்து வைத்துள்ளார். இதனையடுத்து அந்த பகுதிக்கு வந்த சிபிசைடி போலீசார் அந்த பெட்டோல் பங்கிற்கு சீல் வைத்தனர்