குற்றாலம் மெயின் அருவியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய ஐந்து பேரில் 2 பெண்கள் உயிரிழந்த நிலையிலும் 3 பேர் காயங்களோடு மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குற்றாலத்தில் வெள்ள பெருக்கு
குற்றால அருவியில் ஆசை ஆசையாக குளிக்க சென்றவர்கள், அருவியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் நேற்று மாலை வன பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அப்போது நீர் வீழ்ச்சியில் அளவுக்கு அதிகமான அளவு தண்ணீர் வந்ததால் குளிக்க முடியாமல் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. அப்போது அருவியில் குளித்துக் கொண்டிருந்த 5 பேர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ளனர். அங்கு பாதுகாப்புக்கு நின்று கொண்டிருந்த காவலர்கள் ஒருவரை மீட்ட நிலையில் மற்ற இரண்டு பேர் தடுப்புகளை பிடித்துக் கொண்டு வெள்ளத்திலிருந்து தப்பியுள்ளனர். இருந்த போதும், இரண்டு பெண்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில், பாறைகளில் முட்டி பலத்த காயமடைந்து உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர்.
மக்களே உஷார்.. இந்த 26 மாவட்டங்களில் அடிச்சு ஊத்தப்போகும் கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை..!

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 5 பேர்
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் மேலும் யாரேனும் சிக்கி உள்ளார்களா? என்பது குறித்து ஆய்வு செய்து வரும் நிலையில், சம்பவ இடத்தில் தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் மற்றும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் கூறுகையில், தற்போது, குற்றாலத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு அருவியில் குளித்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் 5 பேர் எதிர்பாராத விதமாக தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ள நிலையில், மூன்று பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக கூறினார்.
இதுபோல் வேறு எங்கும் பார்த்ததில்லை… செஸ் ஒலிம்பியாட் ஏற்பாடுகளை புகழ்ந்து தள்ளிய விஸ்வநாதன் ஆனந்த்!!

வெள்ளத்தில் சிக்கி 2 பேர் பலி
உயிரிழந்தவர் சென்னை பெரம்பூரைச் சேர்ந்த மல்லிகா என்றும் மற்றொருவர் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த கலாவதி என்றும் கூறப்படுகிறது. தற்போது, இந்த சம்பவம் குறித்து அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது அவர்களுக்கு தேவையான இழப்பீடு ரூ.4 லட்சம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும், இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாத வகையில் அதிகாரிகள் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டு பாதுகாப்பை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்தார். அதேபோல் குற்றாலம் அருவிகளில் இதற்கு முன்பு இருந்த முதலுதவி சிகிச்சை மையம் தற்போது இல்லாத சூழலால் அவசர முதலுதவி கொடுக்க முடியவில்லை என கூறப்படுகிறது. அது குறித்து உரிய முறையில் விசாரணை நடத்தப்படும் என அவர் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்
