ராமநாதபுரத்தில் சுற்றுலா வேன் கார் மோதிய விபத்தில் 13 வயது சிறுமி மற்றும் ஐடி ஊழியர் உயிரிழந்தனர். திருமணம் நடைபெற இருந்த ஐடி ஊழியர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ராமேஸ்வரத்தில் கோர விபத்து 2 பேர் பலி : தமிழகம் மட்டுமல்ல நாடு முழுவதும் தினந்தோறும் சாலை விபத்துகளின் எண்ணிக்கை கொண்டே வருகிறது. பேருந்தோடு பேருந்து மோதல், அதிக வேக பைக் ரேஸ் உள்ளிட்ட பல காரணங்களால் விபத்துக்கள் தொடர்ந்து கொண்டே வருகிறது. அந்த வகையில் சாலை விபத்தை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நான்கு வழிச்சாலை எட்டு வழி சாலை என சாலை விரிவாக்கமும் செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாகவும் அதிவேகமாக செல்லும் கார்கள் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கி தவிக்கிறது. இந்த நிலையில் கோடை விடுமுறையையொட்டி சுற்றுலா சென்ற பேருந்து விபத்தில் சிக்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கார்- வேன் மோதி விபத்து சிறுமி உட்பட 2 பேர் பலி

ராமநாதபுரத்தில் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்க்க வந்த் சுற்றுலா பயணிகளின் வேனும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டுள்ளது. இந்த விபத்தில் 13 வயது சிறுமி மற்றும் ஐடி ஊழியர் உயிரிழந்துள்ளனர். சுற்றுலா வேனில் வந்த 13 வயது சிறுமி மகாலட்சுமி, காரில் வந்த ஐடி ஊழியர் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே பலியானர்கள். 

ஐடி ஊழியர் வெங்கடேஷ்க்கு அடுத்தமாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில் விபத்தில் உயிரிழந்ததால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விபத்தில் காயம் அடைந்த 10க்கும் மேற்பட்டோர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுத காட்சி அனைவரையும் கண் கலங்க வைத்தது