மதுரை விமான நிலையத்தில் அதிர்ச்சி !! குப்பை தொட்டில் இருந்து ரூ.14 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்..
மதுரை விமானநிலைய குப்பைதொட்டியில் இருந்து ரூ.14 லட்சம் மதிப்புள்ள 281 கிராம் தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை விமானநிலைய குப்பைதொட்டியில் இருந்து ரூ.14 லட்சம் மதிப்புள்ள 281 கிராம் தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துபாயில் இருந்து மதுரைக்கு தினமும் ஸ்பைஸ் ஜெட் விமான சேவை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று 170 பயணிகளுடன் துபாயிலிருந்து மதுரைக்கு காலை 8:20 மணியளவில் விமானம் வந்துள்ளது. விமானத்திலிருந்து இறங்கிய பயணிகளிடம் சுங்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்து மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் குப்பை தொட்டியில் பேஸ்ட் போன்ற பொருள் ஒன்று கிடப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க:சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியானது.. முடிவுகளை தெரிந்துக் கொள்ளுவது எப்படி..?
இதனையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் பேஸ்ட் போன்ற பொருளை கைப்பற்றி அதனை சோதனை செய்ததில், ரூ.14 ,36,472 281 கிராம் தங்கத்தை மறைத்து வைத்து எடுத்து வந்திருப்பது தெரியவந்தது. துபாயிலிருந்து வந்த பயணி ஒருவர் தான் இதனைக் கொண்டு வந்திருக்க வேண்டும் என்றும் சுங்கத்துறையினருக்கு பயந்து, குப்பைத் தொட்டில் வீசிச் சென்றிருக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதனால் குப்பைத்தொட்டில் தங்கத்தை வீசி சென்ற நபர் யார் என்பதை அடையாளம் காண விமானநிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மதுரை விமான நிலையத்தில் குப்பைத் தொட்டில் ரூ.14 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை மர்ம நபர் வீசி சென்ற சம்பவம் சக பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க:ஹாப்பி நியூஸ்!! வரும் செப்.,8 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள் கிடையாது.. எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை ..?