சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியானது.. முடிவுகளை தெரிந்துக் கொள்ளுவது எப்படி..?
சென்னை பல்கலைக்கழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற செமஸ்டர் தேர்வு முடிவுகள் இணையத்தளத்தில் வெளியானது. மாணவர்கள் https://results.unom.ac.in, https://exam.unom.ac.in, https://egovernance.unom.ac.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம்
முன்னதாக சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த செமஸ்டர் தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று www.unom.ac.in என்கிற இணையதளத்தில் வெளியிடப்படும். மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் செப்டம்பர் 5ம் தேதி முதல் 14 வரை www.unom.ac.in என்கிற இணையதள முகவரியில் கையெழுத்திட்டு 300ரூபாய் வரைவு காசோலையினை The Registrar university of madras என்கிற பெயரில் செப்டம்பர் 15ஆம் தேதிக்கு முன்னதாக சமர்ப்பிக்க வேண்டும்.
6-வது செமஸ்டரில் ஒரு தாள் மற்றும் அரியர் வைத்துள்ள இளநிலை மாணவர்களுக்கு உடனடி எழுத்து தேர்வு மற்றும் செய்முறை தேர்வுகள் நடத்தப்படும். முதுகலை மாணவர்கள் நான்காவது செமஸ்டர் தேர்வில் ஒரு அரியர் வைத்திருந்தால் அவர்களுக்கும் உடனடியாக எழுத்து தேர்வு மற்றும் செய்முறை தேர்வு நடைபெறும்.
இவர்கள் தாங்கள் பயின்று கல்லூரி வாயிலாக செப்டம்பர் 5ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை www.unom.ac.in என்கிற இணையதள முகவரியில் இளநிலை மாணவர்கள் உடனடி தேர்வுக்கான கட்டணமாக 300 ரூபாய் செலுத்தியும், முதுகலை மாணவர்கள் 350 ரூபாயும் எம்.பி.ஏ., எம்.எல். சட்டப்படிப்பு மாணவர்கள் 600 ரூபாயும் செலுத்த வேண்டும். சிறப்பு தேர்வு செப்டம்பர் 24ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை பல்கலைக்கழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற செமஸ்டர் தேர்வு முடிவுகள் இன்று இரவு 8 மணியளவில் இணையத்தளத்தில் வெளியானது. இருப்பினும் தற்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக அதிகாரபூர்வ இணையதளம் திறக்கப்படவில்லை. இரவு 10 மணிக்கு மேல் மாணவர்கள் எளிதாக முடிவுகளை தெரிந்துகொள்ளலாம் என்று அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.