Asianet News TamilAsianet News Tamil

துக்க வீட்டில் பட்டாசு குவியல்.. தீப்பொறி விழுந்து வெடித்து சிதறியது- அலறி அடித்து ஓடிய மக்கள் -10 பேர் காயம்

துக்க வீட்டில் இறுதி சடங்கில் வெடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் மீது தீப்பொறி விழுந்து வெடித்து சிதறியதில் 10க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.  
 

12 people were injured when firecrackers exploded at a funeral procession in Ranipet KAK
Author
First Published May 30, 2024, 3:36 PM IST

துக்க வீட்டில்- பட்டாசு விபத்து

ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை ஆர் ஆர் சாலையில் உள்ள பட்டாணிக்கார தெருவில் வயது மூப்பு காரணமாக சரஸ்வதி என்பவர் இறந்துவிட்டார். அவரது துக்க நிகழ்வில் அவரது உறவினர்கள் ஏராளமானோர் கலந்துக் கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலதாளத்தோடு இறுதி சடங்கு நடத்த ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்பொது இறுதி சடங்கு ஊர்வலத்தில் வெடிக்க பட்டாசு வாங்கி குவித்து வைக்கப்பட்டு இருந்தது.  அப்பொது வேறு ஒரு இடத்தில் வெடிக்கப்பட்ட பட்டாசின் தீ பொறி குவியலாக வைக்கப்பட்டு இருந்த பட்டாசின் மீது விழுந்தது. இதில் குவித்த வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள்  வெடித்து சிதறியது. 

12 people were injured when firecrackers exploded at a funeral procession in Ranipet KAK

12 பேருக்கு தீக்காயம்

இதனால் துக்க வீட்டில் குவிந்திருந்த மக்கள் அலறி அடித்து ஓட தொடங்கினர். இருந்தாலும் பட்டாசுகள் 4 புறமும் வெடித்து சிதறியதில்  அங்கிருந்த பரமேஸ்வரி (65), சரவணன் (50), பார்த்திபன் (27), காவியா (27), பாரதி (41), பிரேமா (70) என  10 க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். உடனடியாக அங்கிருந்தவர்கள் காயப்பட்டவர்களை மீட்டு வாலாஜா தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு அனைவருக்கும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

பட்டாசு விபத்து  தொடர்பாக ராணிப்பேட்டை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் காயப்பட்டவர்களை மாவட்ட ஆட்சியர் திருமதி வளர்மதி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி நேரில் வருகை தந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர்.

தலைக்கேறிய மதுபோதை; பெற்றோரிடம் தகராறு செய்த தம்பியை அடித்து கொன்ற அண்ணன் - ராமநாதபுரத்தில் பரபரப்பு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios