தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவு பெற்றது. இறுதி நாளான இன்று சமூக அறிவியல் தேர்வு நடைபெற்றது. இதனையடுத்து நாளை முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை விடப்படுகிறது.
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவு பெற்றது. இறுதி நாளான இன்று சமூக அறிவியல் தேர்வு நடைபெற்றது. இதனையடுத்து நாளை முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை விடப்படுகிறது.
தமிழகம் முழுவதும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே மாதம் 6 ஆம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவு பெற்றது. தமிழகத்தின் அனைத்து மாவட்டத்திலும் உள்ள அரசுப் பள்ளிகள் , அரசு உதவிப்பெறும் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள், தனியார் மற்றும் சுயநிதிப்பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு பயிலும் 9.55 லட்சம் மாணவ - மாணவிகள் 3,936 தேர்வு மையங்களில் தேர்வினை எழுதினர்.
அடுத்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நிறைவு பெற்று 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜூன் 27 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. மேலும் 10 ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 2 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தேர்வுத்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. இதனுடன், 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 17 ஆம் தேதி வெளியிடப்படுகிறது.
அதன் படி தேர்வு முடிவுகள் வெளியானதும் 11 ஆம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கி 27 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவிருக்கிறது. மேலும் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் ஒன்றாம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை ஜூன் 13 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
மேலும் படிக்க: புதுச்சேரியில் ஜூன் 23 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு.. சனிக்கிழமைகளில் விடுமுறை.. அமைச்சர் அறிவிப்பு
