விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே சுமார் 1000 ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே சுமார் 1000 ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திருச்சுழி அருகே மணவராயனேந்தல் பகுதியில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது இளையராஜா என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் 24-ம் தீர்த்தங்கரர் மகாவீரர் சிலை இருப்பதை அருப்புக்கோட்டை எஸ்.பி.கே கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் ராஜபாண்டி, தொல்லியல் துறை மாணவர் ஆகியோர் கண்டுபிடித்தனர். 
இந்த தகவலை அவர்கள் தொல்லியல் துறைக்கு தெரிவித்துள்ளனர். ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே. ராஜகுரு உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர்.

தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு இதுகுறித்து பேசிய போது “ விருதுநகர் மாவட்டத்தில் தொப்பலாக்கரை, குறண்டி, கோவிலாங்குளம், இருஞ்சிறை, திருச்சுழி, பந்தல்குடி, பாறைக்குளம், குலசேகரநல்லூர் உள்ளிட்ட இடங்களில் சமண சமயம் பரவி இருந்ததற்கான தடயங்கள் ஏற்கனவே கிடைத்துள்ளன. 

விஜயகாந்திற்கு இரங்கல் தீர்மானம்... ஆளுநரின் செயலுக்கு வருத்தம்- சட்டப்பேரவையில் விடாமல் அடிக்கும் திமுக அரசு

மணவராயனேந்தலில் கண்டுபிடிக்கப்பட்ட மகாவீரர் சிற்பம் பாதி மண்ணில் புதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கருங்கல்லால் ஆன இந்த இந்த சிறப்பத்தில் மகரத்தண்டுகளுன் கூடிய சிம்மாசனத்தில் மகாவீரர் அமர்ந்துள்ளார். அவருக்கு பின்புறம் பிரபாவளி எனும் ஒளிவட்டம் உள்ளது. அதன் மேற்பகுதியில் சந்திராதித்தம், நித்தியவிநோதம், சகல பாசனம் ஆகியவற்றை குறிக்கும் முக்குடை அமைப்பு உள்ளது. 

இபிஎஸ்க்கு சந்தேகம் இருந்தால் கிளாம்பாக்கத்து வாங்க! என்னென்ன வசதிகள் இருக்குனு காட்டுறோம்! அமைச்சர் சிவசங்கர்

இந்த சிலையின் காலம் 11-ம் நூற்றாண்டாக இருக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்புல்லாணியிலிருந்து கமுதி திருச்சுழி வழியாக மதுரை செல்லும் பாதையில் அதிகமான இடங்களில் மகாவீரர் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. 
சிற்பம் உள்ள இடத்தை சுற்றிலும் இரும்பு காலத்தை சேர்ந்த கருப்பு சிவப்பு நிற பானைகள் கிடைக்கின்றன. இந்த பகுதிகள் 2000 ஆண்டுகள் இரும்பு காலம் முதல் மக்கள் குடியிருந்த பகுதிகளாக இருந்திருக்கலாம். பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் இந்த சிற்பத்தை அரசு அருங்காட்சியகத்தில் வைத்து பாதுகாக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.