1000 ரூபாய் பிச்சை சர்ச்சையும்.. திமுகவை பங்கம் செய்து குஷ்பூ கொடுத்த அதிரடி விளக்கமும்.!
தாய்மார்களுக்கு மாதம் ரூ.1,000 பிச்சை போட்டால் ஓட்டுபோட்டு விடுவார்களா? என குஷ்பு பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு திமுகவினர் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.
தாய்மார்களுக்கு மாதம் ரூ.1,000 பிச்சை போட்டால் ஓட்டுபோட்டு விடுவார்களா? என்று குஷ்பு பேசியது சர்ச்சையான நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ளார்.
சென்னை செங்குன்றத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு ஆர்ப்பாட்டத்தில் நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்: தாய்மார்களுக்கு மாதம் ரூ.1,000 பிச்சை போட்டால் ஓட்டுபோட்டு விடுவார்களா? தமிழ்நாட்டில் 3,500 கிலோ போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் திமுக ஆள் தானே? இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் என்ன பதில் சொல்லப் போகிறார். போதைப்பொருளுக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை என கூறியிருந்தார். இந்நிலையில் தாய்மார்களுக்கு மாதம் ரூ.1,000 பிச்சை போட்டால் ஓட்டுபோட்டு விடுவார்களா? என குஷ்பு பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு திமுகவினர் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.
இதையும் படிங்க: தாய்மார்களுக்கு ரூ.1000 பிச்சை போடுவதால் உங்களுக்கு ஓட்டு போட்டுவிடுவார்களா? குஷ்பு சர்ச்சை பேச்சு
இதற்கு பதிலளிக்கும் வகையில் குஷ்பு தனது எக்ஸ் தளத்தில்: 1982ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் புரட்சி தலைவர் எம்ஜிஆர் ஏழைகளுக்கு வழங்கிய இலவச உணவு திட்டத்தை கொண்டு வந்தபோது பிச்சை என முரசொலி மாறன் விமர்சித்த யாரும் அதை எதிர்க்கவில்லை. அதேபோன்று பெண்கள் பேருந்துகளில் பயணிப்பதை ஓசி என பொன்முடி விமர்சித்த போதும் யாரும் விமர்சிக்கவில்லை. மதுரை உயர்நீதிமன்ற அமர்வு அமைத்தது கலைஞர் போட்ட பிச்சை என வேலு பேசியபோதும் வாயை மூடி மௌனமாக இருந்தனர்.
உழைக்கும் மக்கள் டாஸ்மாக்கில் செலவழிக்கும் பணத்தை சேமிக்க நமது பெண்களுக்கு உதவுங்கள். நீங்கள் தரும் பணத்தைவிட குடிகாரர்களால் பெண்கள் படும் வேதனையின் அளவு அதிகம். பெண்களை சுதந்திரமாக மாற்றுங்கள். அவர்களுக்கு உங்கள் ரூ.1000 தேவையில்லை. பெண்களை சுதந்திரமாக ஆக்கினால் கண்ணியத்துடன் வசதியாக குடும்பம் நடத்தும் அளவுக்கு சேமிப்பார்கள்.
திமுகவினருக்குதான் தங்கள் தலைமுறைகளை காப்பாற்ற பணம் தேவையாக இருக்கிறது. உலகத்தில் ஆளும் கட்சியாக இருக்கக்கூடிய திமுக அரசு தோல்வி அடைந்த ஒரு அரசாக இருக்கிறது. பொய்ப் பிரச்சாரத்தை உண்டாக்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அது ஒரு பகுதியாகவும் தான் தெரிவித்த கருத்தை தற்போது விமர்சிக்க தொடங்கி இருப்பதாகவும் கூறியுள்ளார்.