தமிழ்நாட்டில் புதிதாக 1000 பேருந்துகள் வாங்க ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டது.
பொது போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த புதிதாக 500 பேருந்துகள் வாங்கவும், 500 பேருந்துகளை புதுப்பிக்கவும் போக்குவரத்து கழகத்திற்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிதாக அரசு பேருந்துகளை சீரமைக்க, 500 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 200 எஸ்.இ.டி.சி பேருந்துகள் புதிதாக வாங்கப்படும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, விழுப்புரம், கோவை, கோட்டத்திற்கு புதிய பேருந்துகள் வாங்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. அதே போன்று 500 பழைய பேருந்துகளை சீரமைக்க சுமார் 76 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை 8 நாட்கள் விசாரிக்கலாம்.. ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்த நீதிமன்றம்
அரசு போக்குவரத்து கழகத்திற்கு தலா 58.5 லட்சம் செலவில் 200 பேருந்துகளும், கும்பகோணம், மதுரை, நெல்லை கோவை ஆகியவற்றிற்கு ரூ.41.2 லட்சம் செலவில் புதிய பேருந்துகளும் மொத்தம் 444.60 கோடி மதிப்பில் புதிய பேருந்துகள் வாங்கப்பட உள்ளன. சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் 500 பேருந்துகள் பழுதுபார்க்க மொத்தம் ரூ.53.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
