100 people arrested in the road blockade protesting Stalin arrest
அரியலூர்
திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அரியலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர் 100 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரை கொன்ற சம்பவத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை தலைமைச் செயலகம் முன்பு திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் அனைவரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.
அதன் எதிரொலியாக அரியலூர் மாவட்டத்தில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் பேருந்து நிலையம் முன்பு திமுக நகரச் முருகேசன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட திமுகவினர் 40 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.
இதேபோல், செந்துறை பேருந்து நிலையம் முன்பு ஒன்றியச் செயலர் ஞானமூர்த்தி தலைமையில் மறியலில் ஈடுபட்ட திமுக-வினர் 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதேபோன்று, செயங்கொண்டம் அருகே ஆண்டிமடம் நான்கு சாலையில், திமுக ஒன்றிய செயலாளர்கள் தருமதுரை (தெ) ரெங்கமுருகன் (வ) ஆகியோர் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ராமதாஸ், தனசேகரன், குணசேகரன், பாலு உள்ளிட்ட 30 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.
