சாத்தூர் அருகே கடந்த வாரம் நடந்த பட்டாசு விபத்தில் 23 பேர் பலியான சோகம் மறைவதற்குள் மீண்டும் நடந்த பட்டாசு விபத்தில் 6 பேர் உயிரிாந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காளையார் குறிச்சியில் பட்டாசு ஆலை ஒன்றில் இன்று திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் பணியில் இருந்த தொழிலாளர்கள் பலர் சிக்கி கொண்டனர். இதுதொடர்பாக உடனே தீயணைப்புத்துறைக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

இந்த வெடிவிபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 13 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் உடனே சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் பட்டாசுகள் ஒன்றுடன் ஒன்று உராய்ந்து வெடி விபத்து ஏற்பட்டது என்று கூறப்படுகிறது.