Asianet News TamilAsianet News Tamil

பஞ்சாயத்து ஊழியர்கள் 6 பேரை வைத்து கிராம சபை கூட்டத்தை முடித்த பஞ்சாயத்து நிர்வாகம்

விருதுநகர் மாவட்டம் மேட்டமலை கிராமத்தில் பெயரளவுக்கு 6 பஞ்சாயத்து ஊழியர்களை மட்டும் வைத்து கிராம சபை கூட்டம் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

village people not participate grama sabha meeting in virudhunagar district vel
Author
First Published Nov 2, 2023, 9:53 AM IST

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள மேட்டமலை கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஊராட்சி ஒன்றியத்தில் மிகப்பெரிய பஞ்சாயத்து நிர்வாகமாக விளங்கி வருகிறது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் நேற்று கிராம பஞ்சாயத்துகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக மேட்டமலை கிராமத்திலும் கிராம சபை கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த. 

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பஞ்சாயத்து செயலாளர் சக்தி இல்லமால் பஞ்சயத்துஊழியர்கள்  ஆறு பேர் மட்டுமே வைத்து கிராமசபை கூட்டம் நடந்தேறியது. ஊர் பொதுமக்கள் யாரும் கலந்து கொள்ளாத நிலையில் பஞ்சாயத்து ஊழியர்களை மட்டும் வைத்து நடைபெற்ற இந்த கிராம சபை கூட்டத்தை ஊரக வளர்ச்சி அலுவலர்கள் ஏற்றுக்கொள்வார்களா மாவட்ட நிர்வாகம் அனுமதிக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

ஏற்கனவே மேட்டமலை கிராமத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக பஞ்சாயத்து செயலாளர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு மற்றும் வேறு இடத்திற்கு மாறுதல் செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில் மேட்டமலை பஞ்சாயத்து நிர்வாகத்தின் காசோலை உரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று பல்வேறு குளறுபடிகள் உள்ள இந்த பஞ்சாயத்தில் கிராம சபை கூட்டம் கூட முறையாக நடைபெறாத நிலை உள்ளது. இது போன்ற நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எவ்வாறு கையாள போகிறது என்பது கேள்விக்குறியாக உள்ளது. 

ஓடும் ரயிலில் பிரசவ வலி; மருத்துவர்களாக அவதாரம் எடுத்த பெண் பயணிகள் - காட்பாடியில் திக் திக் நிமிடங்கள்

Follow Us:
Download App:
  • android
  • ios