Asianet News TamilAsianet News Tamil

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து - இருவர் படுகாயம்

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் பட்டாசு தயாரிக்கும் போது ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் இரண்டு ஊழியர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

two employees highly injured in firecracker factory fire accident in virudhunagar district
Author
First Published Mar 6, 2023, 2:59 PM IST

விருதுநகர் மாவட்டம் கோட்டநத்தம் அடுத்த சிவகாசி அருகே ஆலமரத்துப் பட்டியைச்  சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு சொந்தமான நாக்பூர் உரிமம் பெற்ற பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் 20க்கும் மேற்பட்ட பட்டாசு தயாரிப்பு அறைகள் உள்ளன. சுமார் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 

இந்நிலையில் பட்டாசுக்கு தேவையான கருந்திரி தயாரிக்கும் பணியின் போது எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில் கருந்திரி தயாரிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த சேடப்பட்டியைச் சேர்ந்த முத்துப்பாண்டி (வயது 42), கட்டனார்பட்டியைச் சேர்ந்த கருப்பையா (வயது 60) ஆகிய இரு தொழிலாளர்கள் தீக்காயமடைந்து படுகாயங்களுடன் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர். விபத்து குறித்து வச்சக்காரப்பட்டி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண்களின் சபரிமலை; மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் கொடியேற்றம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சுற்றுவட்டாரத்தில் பட்டாசு தயாரிப்பு தொழிலே பிரதானமாக இருந்து வருகிறது. பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் விபத்துகள் தவிர்க்க முடியாத ஒன்றாகவே உள்ளது. எனவே தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆலை உரிமையாளர்களும், மாவட்ட நிர்வாகமும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று பணியாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

அகழாய்வில் தோண்ட தோண்ட புதையல்கள்; கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைத்து முதல்வர் பெருமிதம்

Follow Us:
Download App:
  • android
  • ios