அட கடவுளே.. தேர்தலில் மனைவி தோல்வி.. மனவேதனையில் அதிமுக வேட்பாளரின் கணவர் செய்த பகீர் சம்பவம்.!
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சிக்குட்பட்ட 19வது வார்டில் அதிமுக சார்பில் சுகுணாதேவி என்பவர் போட்டியிட்டார். இந்த வார்டில் அவரை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சுபிதா வெற்றி பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் வெறும் 215 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார்.
சாத்தூர் நகர்மன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட தனது மனைவி தோற்றதால் மனமுடைந்த அவரது கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சிக்குட்பட்ட 19வது வார்டில் அதிமுக சார்பில் சுகுணாதேவி என்பவர் போட்டியிட்டார். இந்த வார்டில் அவரை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சுபிதா வெற்றி பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் வெறும் 215 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார்.
இதனால் சுகுணாதேவியின் கணவர் நாகராஜன் மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து சாத்தூர் நகர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த நாகராஜன் சாத்தூர் நகராட்சியில் துப்புரவு பணி மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். இவர் பணி ஓய்வு பெற இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில் நாகராஜன் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.