Asianet News TamilAsianet News Tamil

நீ எப்படி டா கேள்வி கேட்ப? விஜயகாந்த் ஸ்டைலில் விவசாயியை பாய்ந்து வந்து தாக்கிய ஊராட்சி செயலாளர்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிராமசபைக் கூட்டத்தில் கேள்வி எழுப்பிய விவசாயியை ஊராட்சி செயலாளர் காலால் உதைத்து தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

panchayat secretary suspended for attack a farmer who rise a questions in village council meeting in virudhunagar vel
Author
First Published Oct 3, 2023, 7:21 AM IST

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஊராட்சிகள் வாரியாக கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. அந்த வகையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த பிள்ளையார்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட கங்காகுளம் கிராமத்தில் உள்ள கோவிலில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. 

ஸ்ரீவில்லிபுத்தூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி, ஊராட்சி தலைவர் பூங்கொடி உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தில் பங்கேற்ற விவசாயி அம்மையப்பன் என்பவர் ஊராட்சியில் நடைபெறும் குளறுபடிகள் தொடர்பாக தொடர்ந்து கேள்வி எழுப்பினார்.

கிராமசபைக் கூட்டத்தில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை கொடுத்து அமைச்சரை அதிரவைத்த முதியவர்

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இதனால் ஆத்திரமடைந்த ஊராட்சி செயலாளர் தங்கபாண்டியன் திடீரென எழுந்து வந்து விவசாயியை காலால் மிதித்து தாக்குதல் நடத்தினார். உடனடியாக அருகில் இருந்த தங்கபாண்டியனின் ஆதரவாளர்களும் அம்மையப்பன் மீது தொடர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் கிராமசபைக் கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வீட்டுமனை பட்டா கேட்டு மறியலில் ஈடுபட்ட அருந்ததியர் மக்கள் மீது காவல்துறை தாக்குதல்; போர்க்களமான கன்னியா குமரி

இந்நிலையில் தாக்குதலில் காயமடைந்த விவசாயி அம்மையப்பன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் தலைமறைவாக உள்ள செயலாளர் தங்கபாண்டியனை கைது செய்ய காவல்துறை சார்பில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் தங்கபாண்டியன் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios