விருதுநகர் தொகுதியில் நமது சொந்தக்காரர் மாணிக்கம் தாகூர் தான் போட்டியிருகிறார். நீங்கள் அனைவரும் அவருக்கு கை சின்னத்தில் வாக்களித்து நமது உறவினரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் கேட்டுக் கொண்டார்.

தமிழகம் முழுவதும் வரும் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி அரசியல் கட்சியினர் வாக்காளர்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் தற்போதைய எம்.பி. மாணிக்கம் தாகூர், பாஜக சார்பில் ராதிகா சரத்குமார், அதிமுக கூட்டணி சார்பில் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் போட்டியிடுகின்றனார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கோவை அருகே மகன், மகளுடன் ரயில் முன் பாய்ந்த தாய்; பசியின் கொடுமையால் நிகழ்ந்த சோகம்?

இதனால் விருதுநகர் தொகுதி நட்சத்திர தொகுதியாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் மாணிக்கம் தாகூருக்கு ஆதரவாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் சாத்தூர் நகர் பகுதியில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேலும் தேர்தல் பிரச்சாரத்தின் போது சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் இரகுராம் மற்றும் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியின் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் நிர்வாகிகள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

நீங்கள் தான் எனக்கு குடும்பம் மாதிரி; வாக்காளர்கள் முன்னிலையில் கண்ணீர் விட்டு அழுத ஜோதிமணி

மேலும் பொது மக்களிடம் வாக்கு சேகரித்த போது பேசிய வருவாய்த் துறை அமைச்சர் கே.கே எஸ். எஸ்.ஆர். இராமச்சந்திரன், நாம் அனைவரும் உறவினர்கள். எனவே உங்களுடைய சொந்தக்காரனுக்கு கை சின்னத்தில் வாக்கு செலுத்தி நமது வேட்பாளர் மாணிக்கம் தாகூரை பெரு வாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.