Asianet News TamilAsianet News Tamil

உங்களுக்கு நகை கடன் தள்ளுபடி ஆகலையா ? அப்படினா இந்த சான்ஸை விட்டுடாதீங்க.!

திமுக ஆட்சி அமைந்ததுமே நகைக்கடன் விவரங்களை ஆய்வு செய்த போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்கியதில் குளறுபடிகள், முறைகேடுகள் நடந்திருப்பதாக தெரியவந்தது. எனவே இதுகுறித்து ஆய்வு செய்து தகுதி வாய்ந்தவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். 

Jewelry loan waivers can be appealed... important announcement
Author
Virudhunagar, First Published May 4, 2022, 9:58 AM IST

நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதி பெறாதோர் தங்களின் ஆட்சேபனை மனுக்கள் மற்றும் மேல்முறையீட்டு மனுக்களை அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகைக்கடன் தள்ளுபடி

கூட்டுறவு நிறுவனங்களில் 5 சவரன் வரை நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இதனையடுத்து, திமுக ஆட்சி அமைந்ததுமே நகைக்கடன் விவரங்களை ஆய்வு செய்த போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்கியதில் குளறுபடிகள், முறைகேடுகள் நடந்திருப்பதாக தெரியவந்தது. எனவே இதுகுறித்து ஆய்வு செய்து தகுதி வாய்ந்தவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். 

Jewelry loan waivers can be appealed... important announcement

தகுதியானர்கள் பட்டியல்

அதன்படி, கடந்த நவம்பர் மாதம் தமிழக அரசு, கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை வைக்கப்பட்டுள்ள நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தது. இந்த சூழலில் நகைக்கடன் தள்ளுபடி தொடர்பாக தகுதியானவர்களின் பட்டியலை தயாரிக்கும் பணிக்கு குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதை அடிப்படையாக வைத்து, நகை கடன் தள்ளுபடி பெறுவோரின் பட்டியல் வெளியிடப்பட்டது.

Jewelry loan waivers can be appealed... important announcement

அதன்படி சுமார் 13 லட்சம் பேர் மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி பெற தகுதியுடையவர்கள் என்றும் 35 லட்சம் பேர் நகைக்கடன் பெற தகுதி இல்லாதவர்கள் என்று தெரியவந்தது. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதி பெறாதோர் தங்களின் ஆட்சேபனை மனுக்கள் மற்றும் மேல்முறையீட்டு மனுக்களை அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் ஒரு வாய்ப்பு

இதுதொடர்பாக விருதுநகர் மாவட்ட நகைக்கடன் தள்ளுபடி தொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்;- விருதுநகர் மாவட்டத்தில் கூட்டுறவு துறை கட்டுப்பாட்டில் செயல்படும் நகைக்கடன் வழங்கும் கூட்டுறவு நிறுவனங்களில் தமிழக அரசின் ஆணையின்படி பொது நகை கடன் தள்ளுபடி திட்டம் 2021ன் கீழ் நகைக் கடன்கள் தள்ளுபடிக்கு தகுதியான பயனாளிகள் பட்டியல் https://virudhunagar.nic.in என்ற வலை தளத்திலும், விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வலைதளமான www.vrdccbank.inல் கடந்த 8.4.2022 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

Jewelry loan waivers can be appealed... important announcement

இந்த அரசாணையின்படி தள்ளுபடிக்கு தகுதியான பட்டியல் வலைதளத்தில் வெளியிடப்பட்ட 8.4.2022 முதல் 7.5.2022 வரை ஒருமாத காலத்தில் தள்ளுபடிக்கு தகுதி பெறாதோர் தங்களது ஆட்சேபனை மனுக்கள் மற்றும் மேல்முறையீட்டு மனுக்களை தொடர்புடைய கூட்டுறவுச் சங்கங்களுக்கு உட்பட்ட அருப்புக்கோட்டை மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் சரக துணைப்பதிவாளர் அலுவலகங்களில் மனுக்களை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios