விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இருக்கிறது புதுப்பட்டி கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் பிச்சை. விவசாயியான இவர் வயல் நிலங்கள் வைத்துள்ளார். மேலும் ஜல்லிக்கட்டு காளையும் வளர்த்து வந்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் வளர்த்து வந்த ஜல்லிக்கட்டு காளை அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் போன்ற தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று இருக்கிறது.

அதில் பல முறை வெற்றியும் பெற்றுள்ளது. சுற்றுவட்டாரத்தில் பிச்சையின் காளை புகழ்பெற்றது என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்  ஜல்லிக்கட்டு காளை தற்போது மர்ம முறையில் இறந்துள்ளது. அதை  கண்டு அதிர்ச்சியடைந்த பிச்சை கதறி துடித்தார். காளை விஷம் வைத்து கொல்லப்பட்டதாக கிராம கூறுகின்றனர். அதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது. பல போட்டிகளில் வெற்றி வாகை சூடிய ஜல்லிக்கட்டு காளை கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.