விருதுநகர் பலாத்கார சம்பவம்.. இதுதான் நீங்கள் பெண்களுக்கு அளிக்கும் பாதுக்காப்பா? திமுகவை வச்சு செய்யும் EPS.!
விருதுநகரில் இளம் பெண் ஒருவரை திமுக பிரமுகர் உட்பட 8 பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி அவரது வாழ்வை சீரழித்துள்ள கொடுஞ்செய்தி கேட்டு பெருவருத்தம் அடைந்தேன். கண்துடைப்பு கைது நடவடிக்கை மட்டுமில்லாமல்,திமுக அரசு இக்குற்றத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருதுநகரில் இளம் பெண் ஒருவரை திமுக பிரமுகர் உட்பட 8 பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி அவரது வாழ்வை சீரழித்துள்ள கொடுஞ்செய்தி கேட்டு பெருவருத்தம் அடைந்தேன் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
கூட்டு பாலியல் பலாத்காரம்
விருதுநகரில் 22 வயது இளம்பெண் ஒருவரை காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி, பாலியல் பலாத்காரம் செய்து அதை செல்போனில் படம் பிடித்து நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார். மேலும், அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடப் போவதாக மிரட்டி அப்பெண்ணை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துவந்த செந்தில் விநாயகம் தெருவைச் சேர்ந்த ரைஸ் மில் உரிமையாளர் மகனும், திமுக இளைஞரணி வார்டு அமைப்பாளருமான ஜூனத் அகமது (27), முத்தால் நகரைச் சேர்ந்த மாடசாமி, ரோசல்பட்டியைச் சேர்ந்த பிரவீன், பள்ளி மாணவர்கள் 4 பேர் உட்பட 8 பேர் மிரட்டி தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் இவரது தொல்லை அதிகரிக்கவே அந்த இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
பள்ளி மாணவர்கள் கைது
இதனை கேட்டு அதிர்ந்து போன போலீசார் அதிரடியாக 8 பேரை கைது செய்தனர். இதனையடுத்து, 8 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பள்ளி மாணவர்கள் 4 பேர் கூர்நோக்கு இல்லத்திலும் மற்ற 4 பேர் சிறையில் அடைத்தனர். இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் மீது உரிய தண்டனை எடுக்கப்பட வேண்டுமென திமுக எம்.பி. கனிமொழி , மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். விருதுநகர் பெண் பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறியுள்ளார். இந்நிலையில், இதுதான் தாங்கள் பெண்களுக்கு அளிக்கும் பாதுக்காப்பா? எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
இதுதொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- விருதுநகரில் இளம் பெண் ஒருவரை திமுக பிரமுகர் உட்பட 8 பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி அவரது வாழ்வை சீரழித்துள்ள கொடுஞ்செய்தி கேட்டு பெருவருத்தம் அடைந்தேன். கண்துடைப்பு கைது நடவடிக்கை மட்டுமில்லாமல்,திமுக அரசு இக்குற்றத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் பன்மடங்கு இந்த அரசின் கீழ் அதிகரித்திருக்கிறது. இதுதான் தாங்கள் பெண்களுக்கு அளிக்கும் பாதுக்காப்பா? என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.