வெடி விபத்துகளால் விருதுநகரில் மட்டும் 93 உயிரிழப்புகள்; திமுகவுக்கு எதிராக பழனிசாமி ஆவேசம்

விருதுநகர் மாவட்டத்தில் தொடர் வெடி விபத்துகள் நடைபெற்று வரும் நிலையில், அதனை தடுக்கும் வகையில் திமுக அரசு எந்த முயற்சியும் செய்யாததன் விளைவாகவே இன்று மீண்டும் ஒரு விபத்து நடைபெற்றுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

dmk government should give a reasonable compensation to victims who died fire accident at virudhunagar said edappadi palaniswami vel

தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி ஆவியூரில் கல் குவாரி குடோன் வெடித்து சிதறி 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. உரிய பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றாமல் வெடி பொருட்களை நகர்த்தியதே விபத்திற்கு காரணம் என செய்திகள் வருகின்றன. 

மனைவி வேண்டுமா? தவணையை செலுத்திவிட்டு கூட்டீட்டு போ; சேலத்தில் தனியார் வங்கி அடாவடி

கடந்த சில வருடங்களில்  மட்டும் விருதுநகர் மாவட்டத்தில் ஏற்பட்ட வெடிவிபத்துகளில் 93 பேர் உயிரிழந்ததாக சமீபத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. தொடர்ச்சியான விபத்துகள் நடந்தும் இந்த விடியா திமுக அரசு அதனை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காததன் விளைவே இதுபோன்ற தொடர் விபத்துகளும் அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்புகளும்.

மே தினத்தை முன்னிட்டு 1 ரூபாய்க்கு டீ; உழைப்பாளர்களை கௌரவிக்கும் தனியார் தேனீர் கடை உரிமையாளர்

வெடிபொருள் விபத்துகளை தடுக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத பொம்மை முதல்வர் ஸ்டாலின் அவர்கள உயிரிழந்தோர் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கவும், இவ்விபத்து குறித்து உரிய விசாரணை நடத்தி, தவறிழைத்தோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios