Asianet News TamilAsianet News Tamil

மீண்டும் வாக்கு எண்ணிக்கையா? பொய் பிரசாரத்தை இத்தோடு நிறுத்துங்கள் - தேமுதிகவுக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி

விருதுநகர் தொகுதியில் மீ்ண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று கூறி தேமுதிக நடத்திவரும் நாடகத்தை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

dmdk should stop the drama for asking re vote counting at virudhunagar said mp manickam tagore vel
Author
First Published Jun 12, 2024, 11:45 PM IST

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்ற விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் இன்று விருதுநகரில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராஜர் நினைவு இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பெருந்தலைவர் காமராஜர் இல்லத்திற்கு மீண்டும் வந்ததற்கு மிகவும் பெருமைப்படுகிறேன். 

விருதுநகர் எம்பி ஆக தேர்ந்தெடுக்கப்பட்டு டெல்லியில் சென்று நாடாளுமன்ற உறுப்பினராக பதிவு செய்த பின்னர் பெருந்தலைவர் இல்லத்திற்கு வந்துள்ளேன். பெருந்தலைவரின் பெருமை தமிழகம் மட்டுமில்லாமல் உலகமே மெச்சுகிறது. இந்தியாவும் பெருமைப்படுகிறது. கர்மவீரர் காமராஜர் ஆசியுடன் எனது நாடாளுமன்ற உறுப்பினர் பணியை தொடங்குகிறேன் என தெரிவித்தார்.

இந்த மாதிரி உதவி செஞ்சி பாருங்க நிம்மதியா தூக்கம் வரும் - மாற்று திறனாளிகளை நெகிழ வைத்த மதுரை முத்து

தொடர்ந்து பேசுகையில், சிறுவர்கள் விளையாடும் கிரிக்கெடு கிடையாது. திரும்பவும் கொண்டு போய் பேட்டிங் கொடுங்கள் என்று சொல்ல முடியாது. தேர்தல் கமிஷனால் நடத்தப்பட்டு நேர்மையான அதிகாரிகளால் வாக்குகள் எண்ணப்பட்டது. அவர்களும் ஏற்றுக் கொண்டு ( தே.மு.தி.க) வெற்றி பெற்றது என அறிவிக்கப்பட்ட பின்னர் வீட்டிற்குச் சென்று அவரது தாயார் பிரேமலதாவை கூட்டிக்கொண்டு முதலில் இருந்து ஆட வேண்டும் என கூற இது கிரிக்கெட் கிடையாது. அவர்களைப் பொறுத்தவரை மறு வாக்கு எண்ணிக்கை கோருவது சிறுபிள்ளைத்தனமானது. 

இப்படிப்பட்ட பொய்யான, வெறும் விளையாட்டுத்தனமான விளம்பரத்திற்காக செய்யும் விஷயங்களை தேர்தல் கமிஷன் கிளர்க் தான் அந்தப் பெட்டிஷனை வாங்கி உள்ளார். தேர்தல் கமிஷன் அதிகாரிகளே மனுவை வாங்கி இருக்க மாட்டார்கள். வெறும் விளம்பரத்திற்காக தொடர்ந்து செய்து வருகிறார்கள். பொய் பிரச்சாரத்தை அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். மக்கள் தீர்ப்பளித்து இருக்கிறார்கள். வெற்றி இந்தியா கூட்டணிக்கு கிடைத்திருக்கிறது. 

திருமண விழாவில் டிரம்ஸ் வாசித்து மனமகளை இம்ப்ரஸ் செய்த மனமகன்; மதுரையில் சுவாரசியம்

இந்தியா கூட்டணி வெற்றி பெற்று டெல்லியில் எதிர்க்கட்சியாக அமர்ந்துள்ளது. விருதுநகர் மக்களவைத் தொகுதி மக்களின் குரலாக எனது குரல் டெல்லியில் ஒலிக்கும். ஒரு ஓட்டில் வெற்றி பெற்றாலும் அது வெற்றி வெற்றிதான். தேர்தல் கூட்டணி என்பது வித்தியாசமானது. ஜாதி அரசியல் காரணமாகவும் இருக்கலாம் என்றார். 

மேலும், மத்தியிலே ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாமல் மைனாரிட்டி அரசாக மோடி அரசு அமைந்துள்ளது. தனி பெரும் கட்சியாக இல்லாமல் நிதீஷ் குமாரையும், சந்திரபாபு நாயுடுயும் நம்பி இருக்கின்ற கட்சியாக மாறி உள்ளது. உபி மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டி உள்ளதாக கூறியுள்ள பாஜக அங்கும் தோல்வியுற்றுள்ளது.

வருகின்ற அரியானா, மகாராஷ்டிரா, டெல்லி, அடுத்து பீகார் மாநிலத் தேர்தரில் பாஜக தோல்வி அடைவார்கள். அதன் பின்னர் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios