நித்யானந்தா கோழை மாதிரி ஒளிந்து கொண்டு நேருக்குநேர் வராமல் நமது சட்டதிட்டங்களை மதிக்காமல் இருக்கிறார் என மன்னார்குடி ஜீயர் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் மன்னார்குடி செண்டலங்கார செண்பக ராமானுஜ ஜீயர் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- குடியுரிமை திருத்த சட்டம் என்பது நமக்காகவும் நமது நாடு என்பதற்காகவும் கொண்டு வரப்பட்டுள்ளது. இதை யாரும் தட்டி கேட்பதற்கு அதிகாரம் கிடையாது. இதை யார் எதிர்த்தாலும் அவர்களை தேசத்துரோகிகள் என்று நாம் சொல்லலாம். நம் நாட்டில் நமக்கு வேண்டிய சட்டங்களை நாம் இயற்றிக் கொள்ளலாம். இதை கேட்கக்கூடிய அதிகாரம் யாருக்கும் இல்லை கருத்து தெரிவித்தார். 

நித்யானந்தா மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஜீயர் தன் மீதான குற்றச்சாட்டுக்களை மறுக்கும் நித்யானந்தா அதனை உரிய ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும். மாறாக ஓடி ஒளிந்துகொண்டு நாட்டின் சட்ட திட்டங்களை மதிக்காமல் இருப்பது தவறு.

நித்யானந்தா மீது தொடர்ந்து புகார்கள் குவிந்தவாறு உள்ளது. இந்நிலையில் தற்போது கர்நாடக நீதிமன்றம், குஜராத் நீதிமன்றத்தில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. எனவே அவரை எங்கிருந்தாலும் உடனடியாக கைது செய்ய வேண்டும். மேலும், நமது நாட்டையும் தர்மத்தையும் நித்யானந்தா மதிப்பவரானால் காலாவதியான பாஸ்போர்ட்டை புதுப்பித்து கொண்டு வேறு நாட்டிற்கு சென்றிருக்க வேண்டும். ஆனால், அவர் அப்படி செய்யாமல் நாட்டை விட்டு ஓடி தேசத்துரோக செயலில் ஈடுபட்டுள்ளார் என கடுமையாக சாடியுள்ளார்.