ராஜபாளையம் அருகே இசக்கிமுத்துவுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததால் மனைவி கணவரை கண்டித்ததல் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜபாளையம் அருகே இசக்கிமுத்துவுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததால் மனைவி கணவரை கண்டித்ததல் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து (30). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மத்திகிரியில் சொந்தமாக வீடு கட்டி வசித்து வந்தார். இவரது மனைவி மணிமேகலை (26) இவர்களுக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. 

இசக்கிமுத்து ஓசூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் உதவி மேலாளராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் காலை வங்கிக்கு செல்வதாக கூறிச்சேன்றவர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றபோதும் எடுக்கவில்லை. இது குறித்து அவரது மனைவி உறவினர்களிடம் தெரிவித்து பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில், இசக்கிமுத்து தான் விஷம் குடித்து விட்டதாக செல்போனில் வீடியோ எடுத்து நண்பருக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பி உள்ளார். 

ஆனால், இடம் சரியாக தெரியாததால் மத்திகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அவரது செல்போன் சிக்னல் தேன்கனிக்கோட்டை அருகே நொகனூர் காட்டு பகுதியில் காட்டியது. இதையடுத்து, போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அங்கு வாளையார்குட்டை என்னுமிடத்தில் வாயில் துரை தள்ளியவாறு இசக்கிமுத்து சடலமாக கிடந்தார். அவர் பூச்சி மருத்து குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் இசக்கிமுத்துவுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்துள்ளது. இது அவரது மனைவிக்கு தெரியவந்தது. இதையடுத்து, அவர் கணவரை கண்டித்துள்ளார். 

இதனால், இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மனஉளைச்சலில் இருந்த இசக்கிமுத்து பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.