Asianet News TamilAsianet News Tamil

பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாருக்கு எதிராக விருதுநகரில் களம் இறங்கும் டெல்லி பாஜக மோடி அணி!

பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாருக்கு எதிராக விருதுநகரில் சுயேச்சையாக பாஜக நிர்வாகி ஒருவர் களமிறங்கியுள்ளார்

Candidate contest independent in the name of Delhi BJP Modi team in virudhunagar against Radhika Sarathkumar  smp
Author
First Published Mar 27, 2024, 6:17 PM IST

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகம் மற்றும்  புதுச்சேரியில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இந்த தேர்தலில், திமுக, அதிமுக, பாஜக என தமிழகத்தில் மும்முனை போட்டி நிலவுகிறது. இந்த கட்சிகள் இடையே தனித்தனியே கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், நடிகர் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வந்ததற்கிடையே, திடீரென நடிகர் சரத்குமார் தனது கட்சியை பாஜகவுடன் இணைத்து விட்டார்.

தகரப்பெட்டியோடு கோவை வந்த அண்ணாமலையின் சொத்து மதிப்பு இன்று கோடிகளில்!

இதையடுத்து, பாஜக சார்பில் அக்கட்சியின் வேட்பாளராக விருதுநகர் தொகுதியில் அவரது மனைவி ராதிகா அறிவிக்கப்பட்டார். அதன் தொடர்ச்சியாக, விருதுநகர் தொகுதியில் ராதிகா சரத்குமார் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளார். அண்மையில் கட்சியை பாஜகவில் இணைத்த சரத்குமாரின் மனைவி ராதிகாவுக்கு பாஜகவில் சீட் கொடுத்தது அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாருக்கு எதிராக விருதுநகரில் சுயேச்சையாக பாஜக நிர்வாகி ஒருவர் களமிறங்கியுள்ளார். விருதுநகரில் தன்னை விட்டுவிட்டு பாஜக சார்பில் போட்டியிட ராதிகா சரத்குமாருக்கு சீட் ஒதுக்கப்பட்டதால், பாஜகவின் மதுரை மேற்கு மாவட்ட விவசாயி அணி செயற்குழு உறுப்பினராக உள்ள வேதா என்பவர் சுயேச்சையாக களமிறங்கியுள்ளார்.  'டெல்லி பாஜக மோடி அணி' என்ற பெயரில் சுயேச்சையாக அவர் போட்டியிடுகிறார்.

Follow Us:
Download App:
  • android
  • ios