கட்சியவே கலைச்சிட்டேன் என் மனைவி எப்படியாவது எம்.பி. ஆயிடனும்; நடிகர் சரத்குமார் அங்கப்பிரதட்சணம்
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நடிகை ராதிகா வெற்றி பெற வேண்டி அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் நடிகர் சரத்குமார் அங்கபிரதட்சணம் செய்தார்.
சமத்துவ மக்கள் கட்சி என்ற கட்சியை தலைமை ஏற்று நடத்தி வந்த நடிகர் சரத்குமார், அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக திடீரென தனது கட்சியை பாரதிய ஜனதா கட்சியோடு இணைப்பதாக அறிவிப்பு விடுத்தார். இந்த அறிவிப்பு அக்கட்சியில் இருந்த உயர்மட்ட தலைவர்களுக்கே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மக்களவைத் தொகுதியில் ராதிகா சரத்குமார் விருதுநகர் மக்களைவத் தொகுதியில் போட்டியிடுவார் எனக்கூறி அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு களம் கண்டார்.
ராதிகாவை எதிர்த்து அதிமுக கூட்டணியுடன் தேமுதிக வேட்பாளராக விஜயபிரபாகரன் போட்டியிட்டுள்ளார். அதே போன்று திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் தற்போதைய எம்.பி. மாணிக்கம் தாகூர் மீண்டும் போட்டியிட்டுள்ளார். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள், திமுக கூட்டணி வேட்பாளர் மாணிக்கம் தாகூர் இத்தொகுதியில் மீண்டும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து ரேசன் கடைகளிலும் 2 மாதங்களுக்கான பருப்பு, பாமாயிலை வழங்குங்கள் - அரசுக்கு அன்புமணி கோரிக்கை
இதனிடையே பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படவுள்ள நிலையில், விருதுநகர் மக்களவைத் தொகுதியில் தனது மனைவி ராதிகா வெற்றி பெற வேண்டியும், பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வேண்டியும் நடிகர் சரத்குமார் விருதுநகரில் உள்ள பராசக்தி மாரியம்மன் கோவிலில் அங்கப்பிரதட்சணம் செய்து சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். தற்போது இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.