விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற பொழுதுபோக்கு பொருட்காட்சியில் சுழலும் ராட்டினத்தில் இருந்து இளம் பெண் ஒருவர் அந்தரத்தில் தூக்கி எறியப்படும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் - மதுரை நெடுஞ்சாலையில் இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்றின் மைதானத்தில் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு 77வது பொருட்காட்சி அமைக்கப்பட்டு பொதுமக்களின் பொழுதுபோக்கிற்காக அனுமதிக்கப்படுகிறது. பொருட்காட்சியில் பொழுதைக் கழிப்பதற்காக விருதுநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சென்று வருகின்றனர்.

2 ரெய்டுக்கே அதிமுக அடமானம்! அடுத்து தமிழ்நாடு தான்! இபிஎஸ் கடுமையாக விமர்சித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

இந்நிலையில் பொருட்காட்சியில் பொருத்தப்பட்டிருந்த சுழலும் ராட்டினத்தில் பொதுமக்கள் உற்சாகமாக விளையாடி மகிழ்ந்தனர். அப்போது ராட்டினத்தில் அமர்ந்திருந்த இளம் பெண் ஒருவர் ராட்டினம் இயக்கப்பட்ட நிலையில் ராட்டினத்தில் இருந்து அந்தரத்தில் தூக்கி வீசப்பட்டார். இயங்கிக் கொண்டிருந்த ராட்டினத்தில் இருந்து இளம் பெண் கீழே விழுந்த நிலையில், அப்பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

மதுரையை கலக்கும் தர்பூசணி பரோட்டா; உணவு பாதுகாப்பு துறை சொன்ன விஷயம்!!

இதனைத் தொடர்ந்து காயமடைந்த இளம்பெண் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தோடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இளம் பெண் அமர்ந்திருந்த இருக்கையில் பாதுகாப்பு உபகரணம் சரியாக பொருத்தப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில், விபத்து தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை எற்படுத்தி உள்ளது.