விருதுநகர் மாவட்டத்தில் இன்று 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8541ஆக உயர்ந்துள்ளது. 

விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இன்று மட்டும் 5 பெண் செவிலியர்கள், 5 தூய்மை பணியாளர்களுக்கு  உள்ளிட்ட  203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை  8541ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை 4,769 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 3,564 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 63ஆக உயர்ந்துள்ளது. கடந்த 5 நாட்களில் மட்டும் கொரோனாவால் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 58,398 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 8,180 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் விருதுநகர் மாவட்ட மக்கள் அச்சமடைந்துள்ளனர்.