Asianet News TamilAsianet News Tamil

தெருவில் கிடந்த முகக்கவசத்தை பயன்படுத்திய இளைஞரால் குடும்பத்துக்கே கொரோனா...வேலூரில் அதிர்ச்சி சம்பவம்!

அந்த முகக்கவசத்தோரு அவர் வீட்டுக்கும் வந்துள்ளார். அபராதத்திலிருந்து தப்பிய அந்த இளைஞர், பயன்படுத்திய முகக்கவசம் மூலம் கொரோனாவிலிருந்து தப்ப முடியவில்லை. அந்த முகக்கவசம் மூலம் அவருக்கு கொரோனா பரவி, பிறகு வீட்டில் இருப்போருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவிய அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது.

Young man wear used mask in vellore
Author
Vellore, First Published Jun 28, 2020, 9:12 PM IST

வேலூரில் அபராதத்திலிருந்து தப்பிப்பதற்காக தெருவில் கிடந்த முகக்கவசத்தைப் பயன்படுத்திய இளைஞரால், குடும்பமே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்தேறியுள்ளது.Young man wear used mask in vellore
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளொறுவண்ணம் பொழுதொருமேனியாக அதிகரித்துவருகிறது. சென்னை, திருவள்ளூர், செங்கப்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதிகளவில் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவியுள்ளது. சென்னையில் மிக அதிகமாக 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனால், தமிழகத்தில் 5 மாவட்டங்களிம் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Young man wear used mask in vellore
இந்நிலையில், வேலூர் மாவட்டம் காட்பாடியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. காட்பாடி சிவராஜ் நகரில் உள்ள அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த குடும்பத் தலைவர், குடும்பத் தலைவி, 3 பிள்ளைகள் என 5 பேரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள். ஒரே குடும்பத்தில் ஐந்து பேருக்கும் கொரோனா தொற்று எப்படி ஏற்பட்டது என்பதை சுகாதர துறை விசாரணை நடத்தியது. அதில் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று தற்போது கிடைத்துள்ளது.

Young man wear used mask in vellore
அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த 20 வயது மகன், காட்பாடி பகுதியில் முககவசம் அணியாமல் சாலையில் சென்றிருக்கிறார். அப்போது அந்த வழியில் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். முகக்கவசம் அணியாமல் வெளியே வந்ததால், தனக்கு அபாராதம் விதிப்பார்கள் என்ற பயத்தில், சாலையில் கிடந்த முகக்கவசத்தை அணிந்து தப்பித்துள்ளார். அந்த முகக்கவசத்தோரு அவர் வீட்டுக்கும் வந்துள்ளார். அபராதத்திலிருந்து தப்பிய அந்த இளைஞர், பயன்படுத்திய முகக்கவசம் மூலம் கொரோனாவிலிருந்து தப்ப முடியவில்லை. அந்த முகக்கவசம் மூலம் அவருக்கு கொரோனா பரவி, பிறகு வீட்டில் இருப்போருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவிய அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது.Young man wear used mask in vellore
பயன்படுத்தி வீதியில் தூக்கி எறிந்த முகக்கவசத்தை அறியாமையால் பயன்படுத்தி தனக்கும் தனது குடும்பத்துக்கும் கொரோனா வைரஸ் தொற்றை வரவழைத்துக்கொண்டது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios