திருப்பத்தூரில் தறிகெட்டு ஓடிய டிராக்டரில் இருந்து கீழே விழுந்த ஓட்டுநர் மீது டிராக்டர் ஏறி இறங்கியதில், ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

திருப்பத்தூர் மாவட்டம். ஆம்பூர் அடுத்த பாலூர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 35). டிராக்டர் ஓட்டுரான இவர் இன்று காலை, அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்கு டிராக்டர் மூலம் ஏரிக்கரை வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக டிராக்டர் வெங்டேசனின் கட்டுப்பாட்டை இழந்து ஏரிக்கரையில் இருந்து அருகே இருந்த பள்ளத்தில் தாறுமாறாக தறிகெட்டு ஓடியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இதில் நிலை தடுமாறி வெங்கடேசன் கீழே விழுந்த நிலையில், வெங்கடேசன் மீது டிராக்டர் ஏறி இறங்கியுள்ளது. இதில் வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து டிராக்டர் மேலும் கட்டுப்பாட்டை இழந்து அருகே இருந்த விஜயகுமார் என்பவரின் நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த ஓலை குடிசையை இடித்து கொண்டு அங்கிருந்த 100 அடி கிணற்றில் கவிழ்ந்து மூழ்கியுள்ளது.

விஜயகாந்தின் கோபத்தில் நியாயம் இருக்கும்; சுயநலம் இருக்காது - ரஜினிகாந்த் நெகிழ்ச்சி

கண் இமைக்கும் நேரத்தில் இந்நிகழ்வை கண்ட அக்கம் பக்கத்தினர், இதுகுறித்து உடனடியாக ஆம்பூர் கிராமிய காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் வெங்கடேசனின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக வழக்குபதிவு செய்து, விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். விவசாய நிலத்தில் ஏர் உழுவதற்காக டிராக்டரில் சென்ற நபர் டிராக்டர் ஏறி உயிரிழந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D