காதலை பிரித்து வேறொரு நபருடன் கட்டாய திருமணம்; காதலி, காதலன் அடுத்தடுத்து தற்கொலை

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே காதலி இறந்த துக்கத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

young man hanged death in tirupathur district

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சின்னவேப்பம்பட்டு குல்லாய் வட்டத்தைச் சேர்ந்தவர் அசோகன். இவரது மகன் சக்திவேல் (வயது 24). இவர் வெல்டிங் கடை நடத்தி வந்தார். இவரை நேற்று முன்தினம் மாலை கடையில் இருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வரவில்லை என்று தேடி வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை அதே பகுதியில் உள்ள ஒரு குட்டையின் மீதுள்ள மரத்தில் சக்திவேல் தூக்கு போட்டு கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  இதனைக் கண்ட அவரது பெற்றோர் உடனடியாக கிராம காவல் நிலையத்தில்  தகவல் அளித்தனர்.  

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் இறந்து போன சக்திவேல் அதே ஊரைச் சேர்ந்த சினேகா என்ற பெண்ணை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், இருவரும் அண்ணன் - தங்கை உறவுமுறை என்பதால் இருவரையும் பிரித்து  சினேகாவை திருப்பூர் அருகே உள்ள தாராபுரம் பகுதியை சேர்ந்த ராசு என்பவருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து வைத்துள்ளனர். 

கோவையில் நகைக்காக பெண் கழுத்தை நெரித்து கொலை? காவல் துறை விசாரணை

காதலனை பிரித்து விட்டு வேறொரு நபருடன் திருமணம் செய்து வைத்ததை எண்ணி வேதனையுடன் இருந்த புது பெண் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மாமியார் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  இந்த தகவலை அறிந்த சக்திவேல் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios