வேன் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து... 2 பெண்கள் தலைநசுங்கி உயிரிழப்பு..!
வேலூர் அருகே தனியார் காலணி தொழிற்சாலைக்கு ஆட்களை ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 2 பெண் தலைநசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 20 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் துத்திப்பட்டில் எம்.என்.இசட் என்ற தனியார் காலணி தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு பணிபுரியும் பெண் தொழிலாளர்களை, தொழிற்சாலை வேன் மூலம் பணிக்கு அழைத்து வருவது வழக்கம்.
இந்நிலையில், வழக்கம்போல் இன்று வடகரை, வடச்சேரி ஆகிய கிராமங்களில் இருந்து பெண் தொழிலாளர்கள் ஏற்றி கொண்டு வேன் வேகமாக சென்றுக்கொண்டிருந்தது. அப்போது மணியாரக்குப்பம் பகுதி வழியாக வேன் சென்றபோது, பெண் ஒருவர் சாலையை கடக்க முயன்றுள்ளார். அவர் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் வாகனத்தை கட்டுப்படுத்த முயன்றுள்ளார்.
ஆனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிவகாமி, உஷா ஆகிய இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.