வேலூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட புதுவசூரில் ஏழுமலை என்பவரது வீட்டில் வருமான வரித்துறை மற்றும் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் ரூ.27 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் 39 மக்களவை தொகுதியில் ஏப்ரல் 18-ம் தேதி 2-வது கட்டமாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால், பணப்புழக்கம் அதிகம் இருந்ததாகவும், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டுவிட்டதாகவும் கூறி வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. சுமார் 13 கோடி ரூபாய் ரொக்கம் சிக்கியது. இந்த பணம் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு சொந்தமானது என்று கூறப்பட்டது. இதனால் தேர்தல் ரத்து செய்வதாக அதிரடியாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், வேலூர் மக்களவை தொகுதியில் ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெறும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. கடந்த முறை நின்ற அதே வேட்பாளர்களை அதிமுக மற்றும் திமுக களமிறங்கி உள்ளது.

 

இதனிடையே, வேலூர் மக்களவை தேர்தல் நடத்த இன்னும் 23 நாட்கள் உள்ள புதுவசூரில் ஏழுமலை என்பவரது வீட்டில், வருமான வரித்துறை மற்றும் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் ரூ.27 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.