வேலூரில் ஒரே நேரத்தில் 10 அரசு பேருந்துகள் ஜப்தி... ஊழியர்கள் அதிர்ச்சி..!
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து அதிகாரிகள் இன்று வேலூர் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த 10 அரசு பேருந்துகளை ஜப்தி செய்தனர். ஒரே நேரத்தில் 10 பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 10 அரசு பேருந்துகள் ஒரே நேரத்தில் ஜப்தி செய்த சம்பவத்தால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் வேலூர் டெப்போவுக்கு நிலம் வாங்கியது தொடர்பான வழக்கில், நிலுவைத் தொகை ரூ.1.75 கோடியை வழங்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது. நீதிமன்றம் தெரிவித்த கால அவகாசத்திற்குள் நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை. இதையடுத்து, அரசு பேருந்துகளை ஜப்தி செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.