ஒரே இரவில் கொட்டி தீர்த்த கனமழை.. வாணியம்பாடி பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் வைரல் வீடியோ..!

கடந்த சில நாட்களாக ஆந்திர எல்லையில் பெய்து வந்த தொடர் மழையினாலும், நேற்று இரவு பெய்த கனமழையினாலும் வாணியம்பாடி பாலாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

Vaniyambadi Palar river Flood

கடந்த சில நாட்களாக ஆந்திர எல்லையில் பெய்து வந்த தொடர் மழையினாலும், நேற்று இரவு பெய்த கனமழையினாலும் வாணியம்பாடி பாலாற்றில் வெள்ளம் பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச் சலனத்தின் காரணமாக ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கும் மேலாகத் தொடர் மழை பெய்து வருகிறது. இரவு நேரத்தில் பலத்த இடியுடன் கனமழை பெய்து வருவதால் ஓடை, கானாறு, பாலாறு மற்றும் அதன் துணை ஆறுகளில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.

Vaniyambadi Palar river Flood

இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் ஆந்திர மாநில வனப்பகுதியில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. கனமழையால் தமிழக ஆந்திர மாநில எல்லையான புல்லூர் பகுதியில் ஆந்திர மாநில அரசு கட்டியுள்ள தடுப்பணையை தாண்டி பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியுள்ளது.

Vaniyambadi Palar river Flood

அதேபோல பாலாற்றில் அம்பலூர் தரைப்பாலம் மூழ்கியபடி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் தாழ்வான பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

 

மேலும், பாதுகாப்பான இடங்களில் பொதுமக்கள் தங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிம்மம்பேட்டை, நாராயணபுரம் பகுதிகளில் உள்ள கிளை ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios