வாணியம்பாடி அருகே மரத்தில் கார் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2 பேர் படுகாயங்களுடன் மருத்தவமனையில் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சென்னை போரூர் பகுதியைச் சேர்ந்த உமாபதி (26), பிரகாஷ் (26), ஜானகிராமன் (25), சிவா (26) வந்தவாசியைச் சேர்ந்த சுப்பிரமணி (35) இவர்கள் 5 பேரும் சென்னையில் கால் டாக்ஸி ஓட்டுநர்களாகப் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் 5 பேரும் திங்கள்கிழமை வாடகைக் காரில் ஏலகிரி மலைக்கு நேற்று முன்தினம் சுற்றுலா சென்றனர். அங்குள்ள ஓட்டலில் தங்கி, மது அருந்தி கொண்டாடினர். நேற்று பிற்பகலில் சென்னைக்கு புறப்பட்டனர். காரை உமாபதி ஓட்டினார். 

வாணியம்பாடி அருகே வந்துக்கொண்டிருந்த போது காரின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது. கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் தாறுமாறான ஓடியது. பின்னர் புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பிரகாஷ், ஜானகிராமன், சிவா ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

இந்நிலையில் படுகாயமடைந்த 2 பேர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த போது அவ்வழியாக திருப்பத்தூருக்கு சென்றுக்கொண்டிருந்த வணிகவரித்துறை அமைச்சர் வீரமணி விபத்தை பார்த்து, படுகாயம் அடைந்தவர்களை மீட்டு, சிகிச்சை அளிக்க, அமைச்சர் உத்தரவிட்டார். உமாபதியும் மற்றொரு நண்பரும், படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.