டாக்டராக மாறிய திருப்பத்தூர் எஸ்.பி... மாவட்ட மக்கள் பாராட்டு..!
சாதாரண நாட்களிலேயே நடுரோட்டில் யாராவது வீழ்ந்து கிடந்தால், உதவி செய்யாத இந்த காலத்தில், தமிழகம் முழுவதும் கொரோனா பீதியால் சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்தி வரும் வேலையில் நடுரோட்டில் மயங்கிய நிலையில் கிடந்த முதியவருக்கு திருப்பத்தூர் எஸ்.பி விஜயகுமார் உதவிய சம்பவம் பலரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வாரச்சந்தை சாலை அருகே நடந்து சென்றுக்கொண்டிருந்த முதியவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதனைப் பார்த்த ஊர்க்காவல் படையைச் சேர்ந்த ஒருவர் ஓடிவந்து தூக்கி தன்னிடம் இருந்த தண்ணீர் பாட்டிலில் இருந்து தண்ணீரை எடுத்து முகத்தில் பீய்ச்சி அடித்தார். பின்னர், அப்பகுதி மக்கள் சிலர் ஓடிவந்து அந்த பெரியவரைத் தூக்கிச் சென்று பூட்டப்பட்ட ஒரு கடையின் வாசலில் படுக்க வைத்தனர்.
அப்போது வாணியம்பாடியில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளைப் பார்வையிடுவதற்காக காரில் வந்துக்கொண்டு இருந்த திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி.விஜயகுமார், தனது வாகனத்தை நிறுத்தி இறங்கி வந்து பார்த்தார். அப்போது, தண்ணீர் கொடுத்தும் முதியர் மயங்கி நிலையில் இருப்பதை கண்டதும் அவசர முதலுதவியாக அவரது கை மற்றும் நெஞ்சில் கைவைத்து நாடிப்பார்த்தார்.
அவரை நன்றாகச் சுவாசிக்க வைக்க முயன்றார். உடனடியாக அவசர ஆம்புலன்ஸ்க்கு தகவல் தர அவை வந்ததும், அவரை அந்த வாகனத்தில் ஏற்றி வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். கொரோனா தொற்று நாடு முழுவதும் பீதியில் இருந்து வரும் நிலையில் எதையும் பொருட்படுத்தாமல் ஓடி வந்து உதவியது அம்மாவட்ட மக்களை பெரும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது. விஜயகுமார் ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்தாலும், அவர் எம்.பி.பி.எஸ் படித்த மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.