Asianet News TamilAsianet News Tamil

டாஸ்மாக் கடைகளுக்கு திடீர் விடுமுறை..! அதிர்ச்சியில் குடிமகன்கள்..!

திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் 16ம் தேதி அடைக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

tasmac shops will be closed on January 16th
Author
Tirupattur, First Published Jan 12, 2020, 1:33 PM IST

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை 14ம் தேதி முதல் கொண்டாடப்படுகிறது. 14ம் தேதி போகி பண்டிகையும், 15ம் தேதி தை பொங்கலும் 16ம் தேதி மாட்டுபொங்கலும் வருகிறது. பொங்கல் திருநாள் சமயங்களில் மதுபான கூடங்களில் குடிமகன்கள் கூட்டம் அலைமோதும். பொங்கலுக்கு மறுநாளான மாட்டுப்பொங்கல் அன்று தான் திருவள்ளுவர் தினமும் வருகிறது. அன்று தமிழகத்தில் இருக்கும் டாஸ்மாக் கடைகள் அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

tasmac shops will be closed on January 16th

இந்தநிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் அனைத்து கடைகளையும் 16 ம் தேதி அடைக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர், திருப்பத்தூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபான கடைகளை ஒட்டியுள்ள மதுபான பார்கள், நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் உள்ள பார்கள் அனைத்தும் 16-ந் தேதி (வியாழக்கிழமை) திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மூடி வைக்க வேண்டும். அன்று மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது. 

tasmac shops will be closed on January 16th

மதுபானம் விற்பனை செய்வது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகளின் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதேபோல், அன்றைய தினத்தில் டாஸ்மாக் மதுபான கூடங்கள் திறக்கப்பட்டிருந்தாலோ, பார்களில் மதுபானம் விற்பனை செய்வதாக தெரியவந்தாலோ, மதுபான பார் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் மற்றும் உரிமங்களை ரத்து செய்தல் போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios