தமிழகத்தில் வெளுத்து வாங்கிய பருவ மழை..! தப்பிய மாவட்டங்களின் பட்டியல்..!
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் சராசரியாக 44 சென்டிமீட்டர் பெய்யும் என்றும் தற்போது வரையிலும் 43 சென்டிமீட்டர் தான் பெய்திருப்பதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து மாநிலம் முழுவதும் பலத்த மழை பெய்து வந்தது. பல்வேறு இடங்களிலும் கனமழை கொட்டித் தீர்த்தது. இதன்காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. முக்கிய அணைகள் பல நிரம்பி ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். சென்னையிலும் பலத்த மழை பெய்ததால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் வடகிழக்கு பருவமழை தற்போது நிறைவடையும் தருவாயில் இருக்கிறது. மேலும் சில தினங்களுக்கு மழை நீடிக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலையில் இருந்து மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னையில் நேற்று இரவு முதல் பலத்த மழை கொட்டி வருகிறது.
இதனிடையே வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் சராசரியாக 44 சென்டிமீட்டர் பெய்யும் என்றும் தற்போது வரையிலும் 43 சென்டிமீட்டர் தான் பெய்திருப்பதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. தமிழகத்தின் சில மாவட்டங்களில் இயல்பை விட மழை குறைந்துள்ளது. அந்த பட்டியலில் வேலூர், சென்னை, பெரம்பலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன.