பள்ளி மாணவன் ஓட்டிச்சென்று விபத்துக்குள்ளான கார்; 1 மாணவன் பலி, 4 மாணவர்கள் படுகாயம் - சுற்றுலாவின் போது சோகம்

வாணியம்பாடி அருகே பள்ளி மாணவன் ஓட்டி சென்ற கார் மேம்பாலத்தின் தடுப்புச் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார், 4 பேர் காயம் அடைந்தனர்.

school student killed road accident in tirupattur district vel

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வளையாம்பட்டு ரயில்வே மேம்பாலத்தில் ஆம்பூர் நூருல்லா  பேட்டை மற்றும் ஜலால்பேட்டை பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவர்கள் 4 பேருடன் 11ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவர் பள்ளி விடுமுறை என்பதால் ஏலகிரி மலைக்கு சுற்றுலா சென்று மீண்டும் காரில் ஊர் திரும்பி கொண்டு இருந்தனர். காரை 11 ஆம் வகுப்பு மாணவன் ஓட்டி சென்றதாகக் கூறப்படுகிறது.

என்னை இனி பட்டப்பெயர் வைத்து கூப்பிடாதீங்க.. அது எனக்கு பிடிக்கவில்லை- திமுகவினருக்கு ஆர்டர் போட்ட உதயநிதி

அப்போது கார் வாணியம்பாடி அடுத்த வளையம்பட்டு ரயில்வே மேம்பாலத்தின் மீது சென்று கொண்டு இருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பாலம் தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த 10ஆம் வகுப்பு மாணவன் அதனான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த ராஷித்(17), ஈஹான்(16), தக்வீம்(16), தல்ஹா(16) ஆகிய 4 மாணவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இமாச்சலில் சட்லஜ் ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்து: சைதை துரைசாமி மகன் மாயம்

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நகர போலிசார் விபத்தில் பலியான மாணவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து காரணமாக பெங்களூரு, சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios